நாட்டில் சில நாட்களாக தினசரி நோய் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்த நிலையில். நேற்றைய தினம் இந்த நோய் தொற்று பரவலில் சற்று மாறுதல் உண்டானது. அதாவது நேற்று இந்த நோய்த்தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது.
ஒரு நாளில் 3,324 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் 3,688 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில், இன்று புதிதாக 3,157 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலினடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,157 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக நோய்த்தொற்று ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 என அதிகரித்திருக்கிறது.
அதேபோல நோய்தொற்றுக்கு ஒரேநாளில் 26 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,23,869 என அதிகரித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,723 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,38,976 என அதிகரித்திருக்கிறது.
அது ஒரு நோய் பெற்றோருக்கு தற்சமயம் 19, 500 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இதுவரையில் 1,89,23,98,347 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.