சினிமா படம் போல் நடந்த குழந்தை திருட்டு..

0
237

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சரவணன்.

இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவுசல்யா. இவர்கள் இருவருக்கும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

சினிமா படம் போல் நடந்த குழந்தை திருட்டு..  வழக்கம்போல் காலையில் சரவணன் எப்பொழுதும் கிளம்புவது போல் கிளம்பி அவருடைய ஓட்டுநர் பணிக்கு சென்றுள்ளார். அன்று அவர் மனைவியும், அவர் மகளும் அவர் வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் அவர் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் திருடிவிட்டு பின்பு அவர் மனைவியிடமும் அவர் மகளிடமும் உள்ள அனைத்து நகைகளையும் பறித்துக் கொண்டனர. பின்பு அவருடைய 11 வயதான மகளை கடத்திச் சென்றனர். அதன்பின்பு சிறுமியின் பெற்றோர்களிடம் 50 லட்சம் பணம் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டினர் . இதனைத் தொடர்ந்து சரவணனும் கவுசல்யாவும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக 7 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுமியை மீட்கப்பட்டதாகவும் மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட இரண்டு பேரையும் கைது செய்ததாகவும் போலீஸார் அறிவித்தனர்..

 

Previous articleஇந்தியாவில் வெகுவாக குறைந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை! மக்கள் மகிழ்ச்சி!
Next articleஇந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here