அண்மையில் மிகப்பிரபலமான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இதனால் சீனாவிற்று பலாயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இந்திய இறையாண்மையை கருத்தில் கொண்டு பல லட்சம் பேர் பயன்படுத்தி வந்த சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஆப்பு வைத்தது.
இந்நிலையில் சீன செயலிகளுக்கு மாற்றாக புதிய செயலிகளை உருவாக்கும் நோக்கில் இந்திய ஐஐடி விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். டெல்லி ஐஐடி மாணவர்கள் டிக்டாக் செயலியை போன்றதொரு ஆஃப்பை உருவாக்கினர். இந்த செயலிக்கு “ரோபோசா” என்ற பெயர் வைத்து, உள்நாட்டு தரவுகளால் உருவாக்கியதால் இதன்மூலம் எந்தவித பாதிப்பும் வராது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு புதிய செயலிகளை உருவாக்கும் பணியில் ஐஐடி-யினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். செயலிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை பெரிதளவு விளம்பரப்படுத்தினால்தான் மக்கள் மனதில் பதியும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சீனாவும் டிக்டாக் போன்ற செயலிகளை மிகத்தீவிரமாக விளம்பரம் செய்ததாலே உலகளவில் பரவியது, இந்நிலையில் சீன செயலிகளுக்கான தடைக்கு பிறகு புதிய அப்ளிகேசன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.