ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இது வரை ஓமன், பப்புவா நியூ ஜெனியா, ஸ்ரீலங்கா, நமீபியா, ஸ்காட்லாந்து, பங்களாதேஷ் விளையாடி இருக்கின்றன. இந்த போட்டியானது கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது.
இன்றைய போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு நமீபியா மற்றும் நெதர்லாந்து விளையாடுகின்றனர். இரவு 7.30 மணிக்கு ஸ்ரீலங்கா அயர்லாந்து நாடுகள் போட்டியிடுகின்றன.
இந்த வரிசையில் 24ந் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத இருக்கின்றன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கொள்கை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல மோதல்கள் இருந்து வருகின்றன.
பாகிஸ்தான் இந்திய இறையாண்மைக்கு பல செயல்களை செய்து வருகிறது, எதிர்பாராத நேரங்களில் மக்களின் மீதும், ராணுவத்தின் மீதும் பல பல தாக்குதலைகளை நடத்தி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என மத்திய சமூக நீதித்துறை மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.