RRR இல்லை… காஷ்மீர் பைல்ஸ் இல்லை… இந்தியாவில் இருந்து ஆஸ்கர் செல்லும் படம் இதுதான்!
இந்தியாவின் சார்பாக இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரை படமாக குஜராத்தி திரைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது.
சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட இந்திய படங்கள் வாங்கவில்லை. இந்தியாவின் சார்பாக சென்ற லகான் திரைப்படம் மட்டும் கடைசி சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆர் ஆர் ஆர் அல்லது காஷ்மீர் பைல்ஸ் ஆகிய திரைப்படத்தில் ஏதாவது ஒன்று ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டது.
ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி “செல்லோ ஷோ” என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள படத்தின் இயக்குனர் பான் நளின் ” இப்படி ஒரு நாள் வந்து ஒளியைக் கொண்டு வரும் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. செலோ ஷோ உலகம் முழுவதிலுமிருந்து அன்பை பெற்று வருகிறது. ஆனால் என் இதயத்தில் ஒரு வலி இருந்தது, அதை எப்படி இந்தியாவைக் கண்டறிய வைப்பது? இப்போது நான் மீண்டும் சுவாசிக்கிறேன், மகிழ்விக்கும், ஊக்கமளிக்கும் மற்றும் அறிவொளி தரும் சினிமாவை நம்புகிறேன்! நன்றி ஜூரி.” எனக் கூறியுள்ளார். இத்தாலியின் சினிமா பாரடைசோ என்ற திரைப்படத்தை இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.