7வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்தியா! இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!
நடப்பு உலகக் கோப்பை தொடரில் 7வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று(நவம்பர்2) இலங்கை அணியுடன் இந்தியா விளையாடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு அணியும் மிகக் கடினமாக விளையாடி வருகின்றது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெறும் இடத்தில் இருக்கின்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்ததால் வங்கதேச அணி முதல் அணியாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அந்த வகையில் மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் ஒரு. பெட்டியை வென்றாலும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இன்று(நவம்பர்2) நடைபெறும் 33வது லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 7வது இடத்தில் இருக்கும் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி தகுதி பெற வேண்டும் என்றால் மீதம் உள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று நல்ல ரன் ரேட் வைத்திருக்க வேண்டும். மேலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் இலங்கை அணியின். அரையிறுதி வாய்ப்புக்கு காரணமாக அமையும். இன்றைய போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால் உலகக் கோப்பையை மறந்து இலங்கை திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்.
அதே சமயம் மீதம் உள்ள மூன்று போட்டிகளில் எதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி பெட்டிக்கு முன்னேறும் என்ற நிலையில் இந்தியா உள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிராக இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். மேலும் விராட் கோஹ்லி ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக பத்து சதங்கள் அடித்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதும் இந்த போட்டி இன்று(நவம்பர்2) மதியம் 2 மணிக்கு மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் தொடங்குகின்றது.