இந்தியா பாகிஸ்தான் போர்.. Full சப்போர்ட் செய்ய தயார்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!!

Photo of author

By Rupa

இந்தியா பாகிஸ்தான் போர்.. Full சப்போர்ட் செய்ய தயார்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!!

Rupa

india-pakistan-war-ready-to-full-support-us-president-trumps-action-speech

India Pakistan: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலினால் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்ப கட்டத்தில் சிந்து நீர் துண்டிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை போட்டது. பின்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையொட்டி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த முகாம்கள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலலானது நள்ளிரவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம்களை அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல தொடர்ந்து வான்வழி ஏவுகணை உள்ளிட்டவைகளை அனுப்பியும் வருகிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டினரும் சமாதானமாக போக வேண்டுமென ஐநா சபை அறிவுறுத்தியது. அச்சமயம் பாகிஸ்தானையும் கண்டித்தது குரிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில் தற்பொழுது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது ரீதியாக பேசியுள்ளார். அதில், எனக்கு இந்தியா காஷ்மீர் இருவரும் நல்ல பழக்கம். இப்படி போர் செய்து கொள்வது மிகவும் மோசமான ஒன்று. இவர்கள் இருவரும் இதனை சரி செய்ய முன் வர வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். கூடிய விரைவில் இந்த போர் நிறுத்தப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேற்கொண்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு இந்திய பாகிஸ்தானை சமரசம் பேச அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அழைத்துள்ளது உலக நாடுகள் மத்தியில் திரும்பி பார்க்க வைத்துள்ளது.