10 ஆம் வகுப்பு படித்திருந்தால் 63,000 சம்பளம்! இந்திய அஞ்சல் துறை வழங்கும் அருமையான வாய்ப்பு
இந்தியா அஞ்சல் துறை- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையிலுள்ள அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தின் இந்த பணிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| நிறுவனம் | தமிழக அஞ்சல் துறை |
| பணியின் பெயர் | Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver |
| பணியிடங்கள் | 35 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.06.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | Offline |
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
- M.V Mechanic 05
- Copper & Tinsmith 01
- Painter 01
- Tyreman 01
- M.V Electrician 02
- Driver 25
Staff Car Driver கல்வித்தகுதி :
- 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
M.V.Mechanic, Copper & Tinsmith, Painter கல்வி தகுதி:
ITI in relevant fields/ 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் துறை சார்ந்து 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து “மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.” என்ற முகவரிக்கு 26.06.2021 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
