உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா ஆயத்தம்:பாதுகாப்புத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு

Photo of author

By Parthipan K

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதார தாக்கம் ரூ.20 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிவித்தார் .இதில் முக்கியமாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பொருளாதார திட்டம் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியாவை ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டார். அதில் சுயசார்ப்பு இந்திய திட்டத்திற்கு ஒரு பெரிய உந்துதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் (MoD) இப்போது தயாராக உள்ளது என்று கூறினார்.பாதுகாப்பு உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 101 வகையான பாதுகாப்பு தளவாட இறக்குமதியை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஏற்படும் பொருளாதாரம் உள்கட்டமைப்பு, அமைப்பு ,மக்கள்தொகை, மற்றும் தேவை ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டு ஒரு தெளிவான நோக்கத்தை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு ஒன்றை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.அதன் பெயரே அதம்நிர்பர் பாரத் ஆகும்.

பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 சாதனங்களை தடை செய்துள்ள பின் இந்தியாவில் புதிதாக பட்டியல் ஒன்றை தயார் செய்யப்பட்டுள்ளது. சுயசாப்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதியை தடை செய்ததாக கூறப்படுகிறது.இதன் ஒரு நோக்கமாக இந்தியா ராணுவ தடையை 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்திய பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இந்திய நிறுவனமே ஊக்குவிக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே வாங்க பாதுகாப்புத்துறை பொருட்கள் ரூ.52,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதற்குப் பின்வரும் 6-7 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே மருந்துகள், வெடிபொருட்கள் ,ஆயுதங்கள், தனி தொழில்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் பலத்த ஆலோசனைகளுக்கு பிறகு இந்தப் பட்டியல் MoD தயாரிக்கப்படும் என கூறியுள்ளனர். பொருட்களின் கிட்டத்தட்ட 260 திட்டங்கள் ஏப்ரல் 2015 முதல் ஆகஸ்ட் 2020 வரை சுமார் ரூ.3.5லட்சம் கோடி செலவில் சேவை ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ராணுவம் மற்றும் விமானப்படை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. 1,40,000கோடி மதிப்பிலான பொருட்கள் கடற்படையை எதிர்பார்க்கப்படுகின்றது.இதில் ராணுவத்திற்கு ஏறக்குறைய 200 கோடி ரூபாய் முதல் 5000 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் இறக்குமதி மீதான தடையை 2020 முதல் 2024 வரை படிப்படியாக செயல்பட்டுத்தி வருவதாக கூறப்படுகிறது.ஆயுதப்படைகளின் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து இந்திய பாதுகாப்புத் துறையினர் அறிவிப்பதுஒரு நோக்கமாகவும் மற்றும் இதனால் உள்நாட்டு மயமாக்கலின் இலக்கை அடைய சிறப்பாக அமையும் என
கூறினார்.

இறக்குமதி தடையான இதுவரை கூடுதல் உபகரணங்கள் அனைத்தும் பங்குதாரர்களிடம் கலந்தாலோசித்து டி.எம்ஏ.வால் படிப்படியாக அடையாளம் காணப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.