இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

0
125

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவாக நடைபெற்று வருவதால் நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணியும் நாடு முழுவதும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மளமளவென பரவிய இந்த நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, தன்னுடைய வீரியத்தை குறைத்துக்கொள்ள தொடங்கியிருக்கிறது.

இந்தநிலையில், இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து வருகின்றது, இதன் அடிப்படையில் நேற்றைய தினம் 12 472 நபர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 451 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட இருக்கின்ற தகவலின் அடிப்படையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 451 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், கேரள மாநிலத்தில் மட்டும் 7 ஆயிரத்து 163 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது எனவும், தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 653 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் சுமார் 585 பேர் பலியாகி இருக்கிறார்கள், இதன் மூலமாக உயிரிழந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 55 ஆயிரத்து 653 ஆக அதிகரித்திருக்கிறது. ஆகவே உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 14 ஆயிரத்து 21 பேர் விடுபட்டு இருக்கிறார்கள் இதன் மூலம் குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 94 ஆயிரத்து 339 ஆக அதிகரித்திருக்கிறது. ஆகவே குணமடைந்தவரின் எண்ணிக்கை 98.19 சதவீதமாக இருக்கிறது.

அதோடு நாடுமுழுவதும் நோய்த்தொற்றுக்கு தற்சமயம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 661 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரையில் 103 கோடியே 51 லட்சத்து 25 ஆயிரத்து 577 நபருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையில், இந்தியாவில் நோய்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 13 லட்சத்து ஐயாயிரத்து 962 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 60 கோடியே 32 லட்சத்து 7 ஆயிரத்து 305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Previous articleபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!
Next articleவாக்காளர் பட்டியல் திருத்தப் பணி! அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்!