நாட்டில் நோய் தொற்று பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 166 பேருக்கு நோய் தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 437 பேருக்கு நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள், இதன் மூலமாக நோய் தொற்று பரவாது இதுவரையில் பலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 209 ஆக அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 754 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரே தினத்தில் 36 ஆயிரத்து 830 பேர் பூரண குணம் அடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் இருக்கின்ற பல மருத்துவமனைகளில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 846 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், நாட்டில் இதுவரையில் 55 கோடியே 47 லட்சத்து 30 ஆயிரத்து 609 பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்ட இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் 88,13,919 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.