இந்தியா அமெரிக்காவிடமிருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த சீனா.. ட்ரம்ப் கொடுத்த ரிவென்ஜ்!!

0
8
India robbed China of millions from America.. Trump gave revenge!!
India robbed China of millions from America.. Trump gave revenge!!
Donald Trump : டொனால்ட் ட்ரம்ப்  சீனா மீது விதித்த வரியால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு உண்டாகியுள்ளது. அதாவது சீனா ரீஸ்டாம்ப் முறையை ஒவ்வொரு நாட்டிலும் உபயோகப்படுத்துகிறது. இதனால் அந்தந்த நாட்டினர் வர்த்தக இழப்பை சந்திக்கின்றனர். (ரீஸ்டாம்ப்) என்பது வணிக ஒப்பந்தங்களின் கீழுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொழுது ஒரு சில சலுகைகள் செய்யப்படும்.

அதேபோல நமது நாட்டிலிருந்தும் அந்த ஒப்பந்த அடிப்படையில் உள்ள நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் சில சலுகைகள் இருக்கும். ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சீனா கையொப்பமிடவில்லை, அதற்கு மாறாக தனது தயாரிப்பை அந்த ஒப்பந்த நாட்டில் நிறுவி அங்கிருந்து பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதனால் இதர நாடுகளுக்கு வர்த்தக இழப்பு ஏற்படுகிறது.

இதைதான் ரீஸ்டேம்ப் முறை என கூறுகிறோம். இதே போல தான் அமெரிக்காவிற்கும் நடந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 882 பில்லியன் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. இதனை கண்டறிந்த அமெரிக்கா தற்போது சீனா மீது 34 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர். இதேபோல தான் சீனா இந்தியாவிலும் ரீ ஸ்டாம்ப் முறையை பயன்படுத்தி வருகிறது.

இந்தியா உட்பட 10 நாடுகள் வணிக பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள நிலையில் இவர்களுக்குள் ஏற்றுமதி இறக்குமதியில் சலுகைகள் உண்டு. இதில் சீனா இல்லை, மாறாக தனது நிறுவனத்தை ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் நிறுவி அதன் மூலம் பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அப்படி பார்க்கையில் ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி தான் அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் இந்தியா பெரும் இழப்பீடை சந்திக்க கூடுகிறது.

இதனை சரி செய்ய வேண்டுமென்றால் 10 நாடுகளுடன் போட்ட ஒப்பந்தத்தில் வரையறை செய்ய வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாகத்தான் தற்சமயம் ட்ரம்ப் அதிகப்படியான வரியை சீனாவிற்கு விதித்துள்ளார்.

Previous article7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!
Next articleஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை சுக்கு நூறாக்கிய ட்ரம்ப்!! அல்லல் படப்போகும் இந்தியர்கள்!!