இந்தியா – ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று

0
96

கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று அறியப்பட்டத்து. அதனை தொடர்ந்து ஒவ்வொரு இந்தியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவி வந்தது.

ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதில் நேற்று ஒரே

இது வரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7097 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கொரோனா தொற்றா இறந்திருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் 3000 பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1635 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஈரானை முந்தியுள்ளது இந்தியா.

இந்தியா முழுவதும் இதுவரை 57, 605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது தற்போதைக்கு ஆறுதலாக கருதப்படுகிறது.

Previous articleகோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து ரயில்கள்!
Next articleசென்னையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடக்கம் – விமானங்கள் விவரம்