நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்திய அணி உலகக்கோப்பை தொடரை முடித்ததும் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளோடு மோத உள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியை நோக்கி சென்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது.
நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வங்க தேச தொடரில் மீண்டும் அவர்கள் களமிறங்குகிறார்கள்.
நியுசிலாந்துக்கு எதிரான இந்திய அணி
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக்.
வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ராஜத் படித்தர், ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் த்ரிபாட்டி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யஸ் தயால்.