இந்தியாவின் “டாப் 100 பிரபலங்கள்” – போர்ப்ஸ் அறிவிப்பு.

Photo of author

By Parthipan K

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய கேப்டன் “கிங்” கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.  2019ம் ஆண்டு இவரின் வருமானம் 253 கோடி ருபாய். இரண்டாம் இடத்தில் பாலிவுட் நடிகரும், ரஜினியுடன் 2.O படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய் குமார் இடம் பிடித்துள்ளார். கடந்த 2016’ம் ஆண்டு முதல் இந்த பட்டியலில் முதல் இடம் வகித்துவந்த சல்மான் கான் இந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன், டோனி , சச்சின் டெண்டுல்கர் முறையே நான்காவது, ஐந்தாவது, ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளனர்.

“பேட்ட” வெற்றிப்படத்துடன் இந்த வருடத்தை துவக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த பட்டியலில் 13வது இடத்தை பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் 100 கோடி. கடந்த ஆண்டு 11வது இடத்திலிருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடம் 16வது இடத்தை பிடுத்துள்ளார். இவரது வருமானம் 95 கோடி.

நடிகர்கள் விஜய், அஜித், கமல்ஹாசன் முறையே 47, 52, 56 இடத்தை பிடித்துள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் 53 வது இடத்தை பிடித்துள்ளார்.