T20: தமிழகத்தில் களம் காணும் இந்தியா Vs ஆஸ்திரேலியா.. டிக்கெட் தேவையில்லை முற்றிலும் இலவசம்!!

Photo of author

By Rupa

India vs Australia: இந்தியா மற்றும் இங்கிலாந்து T20 போட்டியை காண செல்பவர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் என தமிழக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 25வது டி20 போட்டியானது இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. முன்னதாக முடிந்த 24 டி20 போட்டிகளில் இந்தியா 13 முறையும் அதுவே இங்கிலாந்து 11 முறையும் வெற்றி பெற்றது. டி20 போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் ஓய்வு அறிவித்த நிலையில், இந்திய அணியின் தலைமையான சூர்யகுமார் யாதவ் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

முன்னதாகவே ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை எல்லாம் உடைக்கும் வகையில் இந்த டி20 போட்டியானது அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி முகமது ஷமி தற்பொழுது அணியில் இணைந்துள்ளதால் அவரது பக்கமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் வரும் 25ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்தியாக்கு இடையேயான  டி20 போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதனை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பார்வையாளர்கள் தங்களின் டிக்கெட்டை காண்பித்து இலவச பயணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.