இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! கடும் நெருக்கடியில் இந்திய அணி!

0
136

எழுபத்தி எட்டு ரன்னில் சுருண்டது இந்திய அணி இங்கிலாந்து அணியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

ரோகித் சர்மா லோகேஷ் ராகுல் உள்ளிட்ட இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 5-வது பந்தில் கேஎல் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.அதோடு மட்டுமல்லாமல் புஜாரா ஒரு ரன்னிலும் விராட் கோலி இறுதியிலும் அடுத்து அவருடைய பந்துவீச்சி லேயே ஆட்டம் இழந்தார்கள் இதன் காரணமாக, இந்திய அணி 21 ரன்கள் சேர்ப்பதற்கு முன் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அதன் பின்னர் 78 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சார்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரேக் ஓவர் டான் 3 விக்கெட்டுகளும் ராபின்சன் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது டோரி பர்ன்ஸ், ஹமீத் உள்ளிட்ட இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்களை இந்த ஜோடியை பிரிக்க இயலவில்லை .இரண்டு பேரும் மிக சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்கள்.முதல் நாள் ஆட்டம் முடியும் வரையில் இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் இருந்தது இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 120 ரன்களை எடுத்து இருக்கிறது. தற்போது வரையில் இந்தியாவை விட 42 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது இங்கிலாந்து அணி.

Previous articleஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அடுத்த நான்கு நாட்களுக்கு ஏற்படப்போகும் கதி இதுதான்!