ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!

0
65
Deadline to leave Afghanistan extended! Taliban announcement!
Deadline to leave Afghanistan extended! Taliban announcement!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற காலக்கெடு அதிகரிப்பு! தலீபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து தற்போது அமெரிக்க படைகள் வெளியேறி விட்டதால் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனாலும் எல்லா நாட்டு அரசாங்கமும் அவர்களது மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அறிவித்து, அனைவரையும் பாதுகாப்பாக, விமானம் மூலம் வெளியேற்றிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் வெளியேறி விட வேண்டும் என்று தலிபான்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தனர். கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நாடுகளும் விமானம் மூலம் பாதுகாப்பாக தங்களது நாட்டு மக்களை வெளியேற்றி வருகின்றன.

இதற்கிடையில் தலிபான்களுக்கு பயந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானின் விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்லவும் முயற்சித்து வருகின்றனர். ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதாகவும், காபுலில் உள்ள அமெரிக்க குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றும் பணிகளும் நிறைவு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முயற்சி செய்யும் ஆப்கானிய மக்களின் நிலை என்ன ஆகும் என்பது மிகவும் கவலை அளிப்பதாவே இருந்தது. நிலைமை மிகவும் மோசம் என்றே மீடியாக்களின் மூலம் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டாலும், ஆப்கன் மக்கள் நாட்டை விட்டு வெளியேற தலீபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

தலீபான்களின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்  ஆப்கானிஸ்தானில் மருத்துவம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த  ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.