ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்னுக்கு ஆட்டமிழந்தது அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணியை 131 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்தது.
இதன் மூலமாக தற்போது தொடரை 2 க்கு 1 என இருந்து வருகிறது. ஆனால் இந்தப் போட்டியை வென்று விட்டால் தொடரை வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் போட்டியில் தென்னாபிரிக்க அணி எந்தவிதமான துடிப்புமில்லாமல் விளையாடியது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் பார்க்கப்பட்டது.
இந்திய அணி தரங்கள் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் குஷிப்படுத்த பிட்ச் போட்டது போதும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றதும் போதும் என போடு ஸ்லோபிட்சை என்று தெரிவித்தார்கள்.
ரிஷப் பண்ட் கேப்டனாக முதல் வெற்றியை சாதித்திருக்கிறார் மறுபுறம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை முதல்முறையாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக பெற்றிருக்கிறது என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுவிட்டது.
ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி அதிரடி காட்டினார் அவருடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளை சந்தித்து 57 ரன்களை சேர்த்தார். 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் விளாசி களத்தில் நின்றார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் தன்னுடைய அருமையான ஆட்டத்தை நிரூபித்துக் காட்டி 35 பந்துகளை சந்தித்து 54 ரன்கள் சேர்த்தார்.
ஸ்ரேயாஸ் அய்யர் 14 ரிஷப் பண்ட் 6 தினேஷ் கார்த்திக் 6 ஏமாற்றமளித்து செல்ல ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 31 ரன்களை சேர்த்தார். தென்ஆப்பிரிக்காவின் சார்பாக டிவைன் பிரிட்டோரியஸ் மிகவும் சிக்கனமாக பந்துவீசி 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
பந்துவீச்சில் ஹாஸ்டல் மிகவும் அற்புதமாக செயல்பட்டு 25 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். சாஹல் இதுவரை நடந்த போட்டியில் சரியாக செயல்படவில்லை. அவர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .தென்ஆப்பிரிக்காவில் ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். கடந்த 15 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவின் 2வது தோல்வி இது என சொல்லப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங்கில் எந்த விதமான ஆதாரமும் தெரியவில்லை பவர் பிளேயில் 108 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது புவனேஸ்வர் குமார் 2 ஓவர் 72 என்று மிகப் பிரமாதமாக வீசிக்கொண்டிருந்தபோது ரிஷப் பண்ட் அவரை திடீரென்று கட் செய்தார். ரிஷப் பண்ட்க்கு இது ஒரு வழக்கமாக ஆகிவிட்டது என சொல்கிறார்கள். யாராவது நன்றாக பந்து வீசினால் அவரை கட் செய்வது என்று சொல்லப்படுகிறது.
எந்தவிதமான ஆரவாரமில்லாத தென்ஆப்பிரிக்க அணியில் மிடில் ஆர்டரில் சொதப்பியது. வாண்டெர் டசன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் பிரிட்டோரியஸும் அதே முறையில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.டேவிட் மில்லர் ஹர்ஷல் பட்டேலின் அபார பந்து வீச்சில் அவுட் செய்யப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவின் இந்த ஆரவாரமில்லாத ஆட்டம் தோல்வியிலேயே முடிவடைந்தது. டி20 போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதோடு இந்த தொடரில் இந்திய அணிக்கு இது முதல் மிகப்பெரிய வெற்றியாகும் ஆட்டநாயகன் விருதை சாஹல் தட்டிச்சென்றார்.