கடைசி நேரத்தில் ட்விஸ்ட் அடித்த இலங்கை வீரர்! இந்தியாவிற்கு ஆரம்பமானது தலைவலி!

Photo of author

By Sakthi

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் இரவு கொழும்புவில் ஆரம்பமானது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நல்ல ஆரம்பத்தை கொடுத்தாலும் அதிரடி மிகவும் குறைவாகவே இருந்தது. கேப்டன் தவான் 40 ரன்களில் அவுட்டானார். ருத்ராஜ் 27 ரன்களிலும் முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 49 ரன்கள் சேர்த்தார்கள். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் நிலைத்து நின்று ஆடவில்லை என்று சொல்லப்படுகிறது. படிக்கல் 29 ரன்களையும், சஞ்சு சாம்சன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 16.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய துணை கேப்டன் புவனேஸ்வர் குமார் மற்றும் ராணா உள்ளிட்டோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே ஆடினார்கள். 12 பந்துகளை எதிர்கொண்ட ராணா 9 ரன்களை எடுத்தார். புவனேஸ்வர் குமார் 11 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்களை சேர்த்தார் இதன் காரணமாக, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பெர்னாண்டோ 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இன்னொருபுறம் பனுக்கா 36 ரன்களில் வெளியேறினார். இருந்தாலும் இதன் பிறகு வந்த சதிரா சமரவிக்ரம மற்றும் தசுன் 3 அதோடு ஹசரங்கா 15 அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இதன் காரணமாக, இலங்கை அணி 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. இருந்தாலும் அந்த அணியின் சில்வா ஒட்டுமொத்தமாக முடிவை மாற்றி அமைத்து விட்டார். அதாவது கடைசி 2 ஓவர்களில் அந்த அணி 20 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த சமயத்தில் அதிரடியாக ஆடிய அவர் 40 ரன்கள் எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதன் காரணமாக, இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை சேர்த்து வெற்றிக்கனியை பறித்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி என வெற்றிபெற்று ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது.