டிஎன்பிஎல் கிரிக்கெட்! திருப்பூர் திருச்சி அணிகள் பலப்பரிட்சை!

0
133

8 அணிகள் பங்கேற்று இருக்கின்ற 5ஆவது டிஎன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் தற்போது சாம்பியனாக இருக்கக்கூடிய சேப்பாக்கம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது.முதலில் ஆடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது கேப்டன் அதிகபட்சமாக 22 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார் சோனு யாதவ் 3 விக்கெட்டும் ஹரிஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் எடுத்தியிருக்கிறார்கள்.

அதன் பின்னர் ஆடிய சேப்பாக்கம் அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஜெகதீசன் 40 பந்துகளை சந்தித்து 52 ரன்னும் சசி 30 பந்துகளை சந்தித்து 42 ரன்களும் எடுத்திருந்தார்கள்.சேப்பாக்கம் அணி பெற்ற முதல் வெற்றி இது என சொல்லப்படுகிறது. அந்த அணி திருப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து திருநெல்வேலி அணியுடன் விளையாடிய ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. சேலம் அணி முதல் தோல்வியை சந்தித்திருக்கிறது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கோவை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணியை வெற்றி கொண்டது. முதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது அதன் பின்னர் விளையாடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. நேற்று இரவு நடைபெற்ற 14 ஆவது லீக் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியுடன் திருப்பூர் அணி மோதியது.திருச்சி அணி 2 வெற்றி 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி மூன்றாவது வெற்றியின் ஆர்வத்துடன் திருப்பூர் அணியை எதிர்கொண்டது. திருப்பூர் அணி ஒரு வெற்றி ஒரு முடிவு இல்லை என்று அதோடு ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.