இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது.
ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்திய அணி விளையாட உள்ள கடைசி சர்வதேச போட்டி இது.எனவே வெற்றியுடன் தொடரை முடிக்கவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தொடக்க ஆட்டத்தில் தடுமாறிய இந்திய அணி விசாகப்பட்டினத்தில் எழுச்சி பெற்றது.
இந்தியா அணியின் தொடர்ந்து பீல்டிங் தான் கவலைக்குரியதாக உள்ளது. இரு ஆட்டங்களிலும் முக்கிய தருணங்களில் இந்திய பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை கவலை கூறியதாக உள்ளது . தவறுகளை திருத்திக் கொண்டு பீல்டிங்கில் நாம் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.
முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்படுவார் என தகவல் கிடைத்து உள்ளது .டாஸ் போடும் போதுதான் ஆடும் லெவேன் அணிவீரர்கள் பற்றி தெரியும்.
இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால், ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக கைப்பற்றிய 10-வது தொடராக பதிவாகும்.
திடீரென விசுவரூபம் எடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரில் இந்தியாவுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது.
அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் படையினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.