ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!!

0
66

 

ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா… அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்…

 

தற்பெழுது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தான் ஹாக்கி அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

 

ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 7வது சீசன் சென்னையில் நடைபெற்று வருகின்றது. இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய ஆறு நாடுகளின் ஹாக்கி அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். இதில் லீக் சுற்றுகளில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கும் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் தொடரை விட்டு வெளியேறி விடும்.

 

அந்த வகையில் இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இதையடுத்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

இதையடுத்து கடைசி லீக் சுற்றில் உலக ஹாக்கி தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள இந்தியா ஹாக்கி அணி உலக ஹாக்கி தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் ஹாக்கி அணியுடன் இன்று மோதியது. இந்த போட்டியை டிரா செய்தால் ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் அரையாறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நோக்கத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு இந்திய ஹாக்கி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை பறித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

 

ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இன்று பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கும் இந்தியா ஹாக்கி அணிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டி துவங்கிய 14வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி காரனர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை வீண் செய்யாமல் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார்.

 

இதையடுத்து ஆட்டத்தின் 23வது நிமிடத்திலும் இந்திய ஹாக்கி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது முறையாக கிடைத்த வாய்ப்பையும் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார்.

 

தொடர்ந்து போட்டியின் 36வது நிமிடத்திலும் இந்திய ஹாக்கி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை இந்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜூக்ராஜ் சிங் கோலாக மாற்றினார். மேலும் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி அணியின் ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்தார்.

 

இறுதி நிமிடம் வரை போராடிய பாகிஸ்தான் ஹாக்கி அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த லீக் போட்டியை டிரா செய்யும் நோக்கத்துடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்து நடப்பாண்டு ஆசிய சேம்பியன்ஸ் ஹாக்கி தொடரை விட்டு வெளியேறியது.