சுதந்திர தினவிழா முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நாளை முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!!

0
30

 

சுதந்திர தினவிழா முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நாளை முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு…

 

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 11ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் தற்பொழுது 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ள நிலையில் இந்த வருடம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமை என்று தொடர் விடுமுறை தினங்கள் உள்ளது.

 

தொடர் விடுமுறைகள் வருவதால் மக்களின் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை.இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 

ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை திருச்சி, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 

சென்னை மாவட்டத்திலிருந்து மதுரைக்கும், விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 85 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அங்கிருந்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னைக்கு திரும்புவதற்கு 75 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 

மேலும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஆடி அமாவசை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை கோட்டத்தில் இருந்து தணிப்பாறை, மாசாணியம்மன் கோவில், இருக்கன்குடி, இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கும் மேலும் பல பகுதிகளுக்கும் மக்களின் வசதிக்காக தேவையின் அடிப்படையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.