இந்தியா அணு ஆயுத சோதனையில் மீண்டும் வெற்றி !! டிஆர்டிஓ-வுக்கு குவியும் பாராட்டு !!

0
128

அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகணை சோதனை இன்று (அக்டோபர் 3) வெற்றிகரமாக நடந்தது.

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை கொண்ட அதிநவீன சவுரியா ஏவுகளையை, இன்று ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணையானது , 800 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கினை தாக்கும் திறமை கொண்டுள்ளது. இந்த சோதனை முயற்சியில் வெற்றி பெற்றதன் காரணமாக விரைவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பழைய சௌரியா ஏவுகணையை காட்டிலும் தற்பொழுது உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையானது, அதிக எடை இல்லாததாலும், இயக்குவதற்கு மிக சுலபமாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஏவுகணை கடைசி கட்டத்தில் இலக்கை நோக்கி ஹைபர்சோனிக் வேகத்தில் செல்வதாக சோதித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தன்னிறைவு பெற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு ஏற்பவாரு ஏவுகணை துறையில் தன்னிறைவு எட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி டிஆர்டிஓ தொடர்ந்து உழைத்து வருவதாக அந்த அமைப்பு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டிருந்த நிலையில், இந்த ஏவுகணையும் 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

இந்தியாவிடம் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் சீனா – வுடன் எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை ,சவுரியா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது ராணுவ தளத்தில் ஒரு பெருமையை பெற்று வந்துள்ளது.

Previous articleபெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு! முதல்வர்
Next articleஅமெரிக்க அதிபருக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!