நியூசிலாந்து தொடரை வென்றது இந்திய அணி!!சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா!!

Photo of author

By Vijay

நியூசிலாந்து தொடரை வென்றது இந்திய அணி!!சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா!!

Vijay

India won the New Zealand series

Cricket: மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில்  இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2024 ஆம் ஆண்டு தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை அடித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் முடிவில் 232 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ப்ரூக் ஹாலிடே 86 ரன்கள் எடுத்தார்.இதனை தொடர்ந்து  233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய  இந்திய அணி.

 ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 122 பந்தில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். யஸ்திகா பாட்டியா 35, ஹர்மன்பிரீத் கவுர் 59, ஆகியோருடன் பெரிய ஸ்டாண்ட் களை அமைத்து 232 ரன்களை துரத்த 6 விக்கெட்டுகள் மற்றும் 34 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றியை 2-1 வித்தியாசத்துடன் பதிவு செய்தது. இந்த தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.