Breaking News, Cinema

பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!

Photo of author

By Vinoth

பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!

Vinoth

Button

பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!

இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெளியான விக்ரம் 2 திரைப்படத்தின் வெற்றி மீண்டும் இந்தியன் 2 படத்தை தூசி தட்டி எழுப்பியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார். மீதிப் படத்தை அவர்தான் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட்டை நிர்ணயித்துள்ளனர். இது சம்மந்தமாக சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி படத்தின் பட்ஜெட் 230 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு  சமீபத்தில் கமல் இந்தியன் 2 ஷுட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இயக்குனர் ஷங்கரோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் கமல் மீண்டும் ஒருமுறை இந்தியன் வேடத்தின் மேக்கப் டெஸ்ட் செய்துகொண்டார் என்று தகவல்க வெளியாகின. இப்போது மாதம் 10 நாட்கள் வீதம்இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல் கலந்துகொண்டு வருகிறார்.

ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா!

கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?

Leave a Comment