இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

0
177

இன்று முதல் ஷூட்டிங்… புதிய தயாரிப்பாளர் அறிவிப்போடு வெளியான இந்தியன் 2 போஸ்டர்

இந்தியன் 2 படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தை தொடங்குவதில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இன்று முதல் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தது போலவே படத்தை லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் தயாரிப்பதாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleமுதல்வர் பங்கேற்கும் அரசு விழா! அதிமுக சட்டசபை உறுப்பினருக்கு வழங்கப்பட்ட கௌரவம்!
Next articleBreaking: மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!! நாளை இது ஒத்திவைப்பு!!