இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!

0
31

இந்தியன் 3 திரைப்படம் உருவாகப் போகிறது! இயக்குநர் சங்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா நடிகர் கமல்!!

 

இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்து இந்தியன் 3 எடுக்க இயக்குநர் சங்கர் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது.

 

இந்தியன் 2 திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இன்னும் 40 நாட்களுக்கும் மேல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த 40 நாட்களின் படப்பிடிப்பை நடத்தினால் இந்தியன் 2 திரைப்படத்தை இன்னொரு பாகமாக அதாவது இந்தியன் 3 படமாகவும் வெளியிடலாம் என்று இயக்குநர் சங்கர் அவர்கள் ஆசைப்படுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் சங்கர் அவர்களின் இந்த ஆசை குறித்து அதாவது இந்தியன் 3 திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் லைகா நிறுவனம் இந்தியன் 3 எல்லாம் வேண்டாம். என்று மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

இந்தியன் 2 திரைப்படத்தின் சில காட்சிகளை மட்டும் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வியப்படைந்ததாகவும் இயக்குநர் சங்கர் அவர்களுக்கு வாட்ச் ஒன்றையும் பரிசளித்தார் என்றும் தகவல் வெளியாகியது.

 

இந்தியன் 2 திரைப்படம் பல சர்ச்சைகள், பல வழக்குகள், பல மரணங்களை சந்தித்து ஒரு வழியாக படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் சங்கர் அவர்களின் இந்தியன் 3 படத்தின் ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.