பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் இங்கேயும் துவரம் பருப்பு விற்பனை!!

0
30

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இன்று முதல் இங்கேயும் துவரம் பருப்பு விற்பனை!! 

இனிமேல் அங்காடிகளில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி இன்று முதல் அமுதம் அங்காடிகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மற்றும் தக்காளி அளவு விற்பனை செய்யப்பட உள்ளன.

தற்போதைய நிலவரப்படி விலைவாசி உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் தக்காளியை சமையலுக்கு வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

தென்னிந்திய சமையலில் அனைத்து குழம்பு வகைகளில் முக்கிய இடம் பிடிக்கும் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டதால் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கூட்டுறவு நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட முக்கிய அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கே இன்று முதல் (வெள்ளிக்கிழமை)  விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி இன்று முதல் அமுதம் அங்காடிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ 60க்கும் துவரம் பருப்பு 500 கிராம் 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ. 60க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஏறி வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருட்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலைக்கு மக்களுக்கு விற்கப்படும் என முடிவு செய்யப்பட்டு அதன்படி தற்போது அங்காடிகளில் விற்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த முடிவை மக்கள் வரவேற்று உள்ளனர்.