3லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ள திரைப்பட வில்லன்?
ஊரடங்கு அமல் படுத்தியுள்ள நிலையில் பேருந்து வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவற்றை ஊரடங்கு முடக்கி வைப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தவித்து வந்தனார் .இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல நடந்தே செல்ல ஆயத்தமாயினர்.
இந்தச்செயலை கண்ட பாலிவுட் நடிகர் சோனு சூட் அவர்கள், மக்களை வாகனம் மூலமாக அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வழிவகை செய்தார்.
இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை, இந்திய நாடு திரும்ப விமான ஏற்பாடு செய்த சம்பவம் ,நாட்டு மக்களிடையே முழு கவனத்தை சோனு சூட் பெற்றது.வேலை இழந்த ஐடி பெண்ணொருவர் காய்கறி வியாபாரம் செய்ததைக் கண்ட சோனு அப்பெண்ணுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார்.
விவசாயி மாடு வாங்க பணம் இல்லாததால் தனது 2 மகள்களை ஏரில் பூட்டி உழுததைக் கண்ட சோனு, அவர்களுக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தார்.
இவை அனைத்தும் செய்த சோனு சூட், தனது பிறந்த நாளை ஒட்டி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக அவர் அறிவித்தார்.
திரைப்படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட், அவரது நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக திகழ்கிறார்.