இந்திய சீன எல்லைப்பகுதியில் நடந்த மோதலின் காரணமாக இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.சீன தரப்பிலும் 43 பேர் இறந்து இருக்கலாம் எனவும்,மேலும் சிலர் காயமடைந்தனர் என உறுதி இல்லாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இந்திய சீன எல்லையில் இருநாட்டு இராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த மோதலின் காரணமாக இந்திய- சீன எல்லையில் போர் மூளும் அபாயகரமான சுழல் நிலவி வருகிறது.
இதனை அடுத்து இரு நாட்டு தரப்பிலும் தங்களுடைய இராணுவ படைகளை குவித்து வருகின்றன.இருந்த போதிலும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்ற கோணத்திலும் இந்திய சீன இராணுவ அதிகாரிகள் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர்.
நேற்று காலை 1 மணிக்கு துவங்கிய இந்த பேச்சு வார்த்தை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.இதில் பங்கோங் டெசோ மற்றும் கல்வான் பகுதியில் குவித்துள்ள சீன படைகளை பின்வாங்க கூறி இந்தியா சீன இராணுவத்திடம் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த பேச்சு வார்த்தைகளின் முடிவு தெரியாத நிலையில் தற்போது இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் லே பகுதிக்கு சென்று எல்லையின் பாதுகாப்பு மற்றும் கள நிலவரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
பேச்சுவார்த்தைகள் முடியும் பட்சத்தில் ஆய்வுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சீன எல்லையில் மோதல் போக்கு அதிகரிக்கும் நிலையில் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்பட்டுள்ளது.