பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

0
224
Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!
Indian Army will defeat Pakistan conspiracy! Plan to send weapons through drones!

பாகிஸ்தான் சதியை இந்திய ராணுவம் முறியடிக்கும்! டிரோன்கள் மூலம் ஆயுதம் அனுப்ப திட்டம்!

இந்தியா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.அந்த வகையில் இதுவரை 12 முறை பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஆயுதங்கள் ஒட்டும் குண்டுகள் மற்றும் பிற தளவாடங்களை அவர்களின் தரப்பில் இருந்து சேதப்படுத்தும் செயல்களை அரங்கேற்றுகிறவர்களுக்கு டிரோன்கள் மூலம் போட்டுச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானிற்கு பதலடி கொடுப்பதற்காக வியூகங்களை இந்திய ராணுவம் வகுத்துள்ளது.அந்தவகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அக்குவா ஜாமர் கள் மல்டி ஷாட் கன்கள் என கூறப்படுகிறது.அதிநவீன துப்பாக்கிகள் போன்ற தளவாடங்களை ராணுவம் நிறுவி உள்ளது.

காஷ்மீர் எல்லைக்கட்டுபாட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் நவீன மற்றும் அதிநவீன தொழில் நுட்ப கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.மேலும் டிரோன் மூலம் ஆயுதங்களை அனுப்பும் பாகிஸ்தானின் சதிக்கு பதிலடியாக அக்குவா ஜாமர் களும் மற்றும் மல்டி ஷாட் துப்பாக்கிகளும் அமையும்.

தற்போது இந்திய எல்லைக்குள் ஆயுதங்களை போடும் பாகிஸ்தான் சதியை இந்தியா பலமுறை முறியடித்துள்ளது.மேலும் பறந்து வந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தி அவற்றில் இருந்த ஒட்டும் குண்டுக்களையும் ஐ.இ.டி என்னும் நவீன வெடிக்கும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.இந்த அக்குவா ஜாமர் களை பொறுத்தவரையில் அவை 4ஆயிரத்து 900 மீட்டர் தொலைவிலேயே டிரோன்கள் நடமாட்டத்தை கண்காணிப்பது மட்டுமின்றி அவற்றின் செயல்பாட்டையும் முடக்கும் திறன் கொண்டது.

மேலும் பாகிஸ்தான் எந்த வடிவில் இந்தியாவில் ஆயுதங்களை கடத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டாலும் அவை அனைத்தையும் இந்திய ராணுவம் அதிநவீன கருவிகளை பொருத்தி முறியடிக்கும் என கூறப்பட்டுள்ளது.டிரோன்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் மல்டிஷாட் துப்பாக்கிகளுக்கு உண்டு.இதற்கான சில அம்சங்களை கொண்ட அதிநவீன தளவாடங்கள் எல்லையில் மேற்கொள்ளப்படுகிற ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

அதனையடுத்து காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அதிநவீன தளவாடங்களை நிறுவிய நிலையில் இதேபோன்ற தளவாடங்கள் சர்வதேச எல்லை பகுதிகளிலும் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் பாகிஸ்தானின் டிரோன் ஆயுதக்கடத்தல் சதியை முறியடித்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசித்திரவாடியில் பரபரப்பு! சிறுமியின் தலை மாயம்: மயானத்தில் கிடந்த மஞ்சள் மற்றும் எலுமிச்சை!
Next articleசெவிலியரா நீங்கள்? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் : 2 மாதத்தில் நிரப்பப்படும் காலி பணியிடங்கள்!