இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டு தடை!! விசாரணை கமிட்டியின் அதிரடி நடவடிக்கை!!
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் இந்திய வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை.
இந்தியாவின் முன்னணி (மும்முறை தாண்டுதல்) வீராங்கனை ஐஸ்வர்யா. கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யாவுக்கு 25 வயது ஆகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன் போட்டியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டு 14.14 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.போட்டியின் போது ஐஸ்வர்யா பயன்படுத்திய மருந்தை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதில் அவர் அஷ்டரின் என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அவர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் எந்த போட்டியிலும் விளையாட முடியாதபடி நான்கு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.விசாரணை கமிட்டியில் ஐஸ்வர்யா கொடுத்த வாக்குமூலம், நான் விளையாட்டின் போது எந்த ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை.
2021 ஆண்டு உடற்பயிற்சியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதனால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என அஞ்சினேன்.அப்போது சக தடகள வீரர் எனக்கு இந்த மருந்தை பரிந்துரைத்தார், அதனால் நான் அந்த மாத்திரையை சாப்பிட்டேன் .
இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா பாபு கூறியதை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த வகையில் விசாரணைக்கு பின் ஐஸ்வர்யாவுக்கு 4 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது, ஐஸ்வர்யா பாபு வென்ற பதக்கங்கள் பறிக்கப்பட்டது.