வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

Photo of author

By Priya

மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உலக வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆன் செயாங்கை தென்கொரியா வீராங்கனையை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜாங் ஷு சியாங் மற்றும் ஜெங் யூ சீனா வீராங்கனை  ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இந்த நூற்றாண்டு பழமையான போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளனர்.