இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

0
161

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!

ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமான ஜஸ்பிரித் பும்ரா சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் ஓலி போப் (2) மற்றும் ஜானி பெர்ஸ்டோ (0) ஆகியோரின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்தார்.ஆறு ஓவர்களை அவர் வீசினார்.போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு தாக்கூர் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஏழு இடங்கள் முன்னேறி 49 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.இங்கிலாந்திற்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத போதிலும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் இடம் வகிக்கும் முதல் 10 பேட்ஸ்மேன்களில் எந்த மாற்றமும் இல்லை.ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி தரவரிசையில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளனர்.இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 127 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வின் ஒரு இடத்தில் பின்தங்கி விட்டார்.ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டர் ஆல் ரவுண்டரில் முதல் இடத்தில் உள்ளார்.இந்திய அணி வீரர்கள் தரவரிசையில் முன்னேறியிருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் வீரர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது.மேலும் அடுத்து விளையாட வருக்கும் தொடர் களுக்கும் இது சிறந்த பயிற்சியைக் கொடுக்கும் விதமாக இருக்கும்.டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அனுபவ வீரர்களை மட்டுமே நம்பி இருந்த காலம் தற்போது மெல்ல மெல்ல மாற ஆரம்பித்திருக்கிறது.

Previous articleநீ காட்டினால் பயப்படுவேனா? பெண்கள் இல்லாத சபை தோல்விதான் அடையும்! போடா! நாங்கள் இப்படித்தான்!
Next articleடி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !