மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

0
201

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே,ரிஷப் பண்ட், டூபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், முகமது ஷமி, மற்றும் புவனேஸ்வஷ்குமார்
ஆகியோர் உள்ளனர்.

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், டூபே,வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், ஷமி மற்றும் புவனேஸ்வஷ்குமார்
ஆகியோர் உள்ளனர்.

இந்த இரண்டு தொடர்களிலும் தல தோனியின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தோனி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்
Next articleபயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்