இந்திய ரசிகர்கள் கழுதைக்கு என்னுடைய பெயரை வைத்தனர்! முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட்டி
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் அவர்கள் நாங்கள் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற பொழுது இந்திய ரசிகர்கள் என்னுடைய பெயரை கழுதைக்கு வைத்த நிகழ்வை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்தார்.
ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் 2006ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி பங்கேற்று சிறப்பாக விளையாடியது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மேற்க்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 30.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 28.1 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்து முதல் சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.
இந்த போட்டியில் டேமியன் மார்டின் அவர்கள் 47 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு காரணமாக இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய ரசிகர்கள் தன்னுடைய பெயரை கழுதைக்கு வைத்தனர் என்று கூறியுள்ளார்.
அதாவது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில் கிறிஸ்ட், மேத்யூ மார்டின் மற்றும் சிலர் வீடியோ கால் செய்து பேசினர். அப்பொழுது தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த நேர்காணலில் “நாங்கள் 2006ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றோம். அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவர் அவர்கள் தானாக கீழே செல்லவில்லை. நான் அவரை சற்று தள்ளினேன். இதனால் இந்தியரசிகர்கள் என் மேல் கடும் கோபம் கொண்டனர். மேலும் இதன் விளைவாக இந்திய ரசிகர்கள் ஒரு கழுதைக்கு என்னுடைய பெயரை வைத்தனர்” என்று நினைவு கூர்ந்தார்.