மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

0
44
AIADMK councilors sit-in
AIADMK councilors sit-in

மேட்டுப்பாளையம் தகராறில் கப் சிப் ஆனா ஸ்டாலின்!! தொடரும் அதிமுக கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் நகர்மன்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள், நகராட்சியில் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தாமல் சுகாதார சீர்கேடு செய்வதாக கூறினர். மேற்கொண்டு இக்கூட்டத்தில் ஆணையர் மற்றும் பொறியாளர் இருவரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் இக்கூட்டம் செல்லாது எனக் கூறி ரத்து செய்யும்படி அதிமுகவை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் திமுக நிர்வாகிகள் இதனை ஏற்க மறுத்து விட்டனர். கூட்டம் ரத்து செய்யக்கோரி இரு தரப்பினர்களுக்கிடையே முதலில் வாக்குவாதம் தொடங்கியது. இந்த வாக்குவாதமானது நீண்டு கொண்டே போகையில் இறுதியில் கை கலப்பில் முடிந்தது. குறிப்பாக திமுக கவுன்சிலர் ரவிகுமார் அதிமுக கவுன்சிலரை நாற்காலி கொண்டு தாக்கியது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கையெடுத்துள்ளனர்.

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கும் வரை இப் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என்று கூறியுள்ளனர். மேற்கொண்டு போராட்டக்காரர்களிடம் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்டக்காரர்கள் தங்களை  தாக்கிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்பதையே அவர்கள் கூறி வருகின்றனர்.அந்தவகையில் இன்று மாலைக்குள் இந்த போராட்டம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும்.

அதேபோல எந்த ஒரு நிர்வாகம் அல்லது நிர்வாகி தவறு செய்யும் பட்சத்தில் அதில் தங்களது கருத்துக்களை உடனடியாக தெரிவிக்கும் ஸ்டாலின் இந்த பிரச்சனை இரண்டு நாட்கள் மீறி நடந்து வருவதையொட்டி அமைதி காத்து வருகிறார்.சொந்த கட்சி நிர்வாகிகளை ஏவி விட்டு வேடிக்கை பார்ப்பது போல இவரது செயல் உள்ளது.