கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மருத்துவர்களும் அதிக அளவில் பலியாகி வருகிறார்கள். அதன்படி கொரோனா பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் 170 பேர் 50 வயதை கடந்தவர்கள். அதாவது 82 சதவிகிதத்திற்கு அதிகமானோர் 50 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 40 சதவிகிதம் பேர் பொதுநல மருத்துவர்கள். இதில் தமிழகத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளனர்.
தமிழ்நாடு – 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்
மஹாராஷ்டிரா – 23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்
குஜராத் -23 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்
பீகார் – 19 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்
வங்கம் – 16 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.