நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இப்போது அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரின் கட்சியினர் சொல்கிறார்கள். ஏனெனில், கட்சி துவங்கி ஒரு வருடத்தை தாண்டிய நிலையிலும் விஜய் இன்னமும் களத்தில் இறங்கவில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
திமுகவை மட்டுமே திட்டியோ, விமர்சித்தோ மட்டுமே அவரின் அறிக்கைகள் வருகிறது. எனவே, அவரை பனையூர் பண்ணையார் எனவும், வொர்க் பிரம் ஹோம் பாலிட்டிக்ஸ் எனவும் அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விஜய் எதற்கும் விளக்கம் அளிப்பததில்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார்.
அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் தனது படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டியவர். அவர் ஒரு முஸ்லீம் விரோதி. அவரை நம்ப வேண்டாம். இஸ்லாம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைக்க வேண்டாம். அவர் ஒரு சைத்தான். முஸ்லீம்களை வாக்குகளை பெறுவதற்காக அவர் நாடகம் போடுகிறர்’ என பேசியிருக்கிறார். மேலும், சென்னையில் நடந்த இப்தார் விருந்தில் குடிகாரார்கள், சூதாட்டக்காரார்களை வரவழைத்து இப்தார் விருந்தையே கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார்’ என பேசியிருக்கிறார்.
இப்தார் விருந்து நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது. இத்தனை நாட்கள் கழித்து இப்போது ஏன் அவர் இப்படி கருத்து தெரிவித்திருக்கிறார் என தெரியவில்லை. இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.