தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

0
257

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பபு நட்கர்னி தனது 86 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணிக்காக நாசிக் நகரில்  பிறந்தவர் பபு நட்கர்னி. 1955 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கிய இவர் 1414 ரன்களும் 88 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாது 191 முதல் தர போட்டிகளிலும்  விளையாடி 500 விக்கெட்டுகள் மற்றும் 8880 ரன்களும் எடுத்துள்ளார். 

தொடர்ந்து 21 ஓவர்கள் மெய்டன் செய்த சாதனை இந்திய வீரர் : 86 வயதில் மரணம் !

இவரின் முறிக்கப்படாத சாதனையாக 1964ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் வீசிய 32 ஓவர்களில் 27  ஓவர்கள் மெய்டன் செய்தது இன்னும் முறியடிக்கபடாமல் உள்ளது. 27 மெய்டன்களில் 21 மெய்டன்களை தொடந்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

86 வயதான அவர் சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த பபு நேற்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு  முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Previous articleசிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !
Next articleயார் அழகு? பிரபல நடிகையுடன் போட்டியிட பத்திரிக்கையாளர் பனிமலர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here