இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகரிப்பு:இன்றைய நிலை என்ன?

Photo of author

By Parthipan K

வர்த்தகத்தின் இரண்டாவது தினமான செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை உயர்வுடன் முடிந்தன.மும்பை பங்குச் சந்தை நேற்று ஏற்பட்ட இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 224.93புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி
52. 35புள்ளிகள் அதிகரித்து முடிந்தன.

வங்கிகள், நிதிநிறுவனங்கள், மெட்டர்களின் பங்ககுளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. ஐடி, பாா்மா, ரியால்ட்டி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உலக அளவில் சந்தை நேர்மறையாக இருந்தன.இந்நிலையில் இந்திய நிறுவனம் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வந்தன.

தாங்கள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் எச்டிஎப்சி,ஐடிசி, அஃசிஸ் பேங்க் பங்குகள் வெகுவாக உயர்ந்து பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

.மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,920 பங்குகளில் 1,600 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில்1,161 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. மீதமுள்ள158 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 202 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும்,430 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 58 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 195 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

நேற்று தேசிய பங்குச் சந்தையில் 917 பங்குகள் ஆதாயம் பெற்றன. அதிலும் 718 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், மீடியா, மெட்டல் குறியீடுகள் ஆகியவற்றில் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 33 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் சற்று சரிவைச் சந்தித்தன.இருப்பினும் நேற்று பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது காலத்திற்குப் பிறகு பங்குச்சந்தை உயர்ந்தது மகிழ்ச்சியளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

தற்பொழுது இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து உள்ள நிலையில்மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 38161.31அகவும் ,நேற்றைய ஒப்பிடுகையில் 221.06புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி11246.46 ஆகவும்,77.57 புள்ளிகள் குறைந்து காலை தொடக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்தன:பங்குச் சந்தை (12.8.2020) 9:22மணி அளவில்.