30 லட்சம் மதிப்புள்ள காரை விற்கும் வீராங்கனை.! அவர் கூறும் முக்கிய காரணங்கள்!

0
199

ஆசிய விளையாட்டில் இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை டுட்டி சந்த் தனக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ காரை விற்கும் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். கொரோனோ பாதிப்பால் ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நின்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான நாட்களும் தள்ளி வைத்துள்ளனர். இதனால் இந்திய ஒலிம்பிக் வீரர்கள் மிகவும் கடுமையாக பாதித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் 100 மீ தடகள போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய பெண் தடகள வீராங்கனை என்று பெயர் பெற்றவர் டுட்டி சந்த். 2019 ஆம் ஆண்டு யுனிவர்சிட் தங்கம் வென்ற ஒரே தடகள வீரர் இவர் மட்டுமே. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரட்டை வெள்ளிப்பதக்கம் வென்ற இவர், 2021 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது பேட்டியில் பேசியதாவது; உணவுக்காக மட்டுமே நான் 1 லட்சம் செலவிட வேண்டும். மேலும் எனது பயிற்சியாளர் மற்றும் பிசியொதெரபிஸ்ட் உதவி ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும். ஒடிசா அரசு எனக்கு கொடுத்த பெரும் தொகையில் பெருமளவு எனது பயிற்சிக்காக செலவு செய்துவிட்டேன். 2021 ஒலிம்பிக் போட்டி தள்ளி வைத்துள்ளதால் எனது பயிற்சிக்கு நிதியளிப்பது கடினமாகிவிட்டது. ஒடிசா மைனிங் கார்ப்பரேஷன் மூலமாம மாதம் 60 ஆயிரம் மட்டுமே பெறுகிறேன். இது தற்போதைய சூழலுக்கு போதுமானதாக இல்லை.

ஆகையால் 30 லட்சம் மதிப்பில் வாங்கி எனது பிஎம்டபிள்யூ காரை பராமரிக்கவே எனக்கு பிரச்சினையாக உள்ளது. இதனால் கிடைக்கும் பணத்தின் மூலம் எனது பயிற்சியை தொடர முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். கொரோனோவால் ஒலிம்பிக் தள்ளிபோனது உலகளவில் விளையாட்டு வீராங்கனைகளை பெரிதும் பாதித்துள்ளது.

Previous articleவிமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் விதிமுறையில் மாற்றம் !
Next articleமாற்றமில்லாத பெட்ரோல் விலை; உயர்ந்த டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்?