இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் எதிரணியான நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலை உடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் இந்த தொடரை இழக்கும். இதனால் 2012 ஆண்டுக்கு பின் தனது சொந்த மண்ணில் தோல்வி அடையும்.
இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். முதல் நாள் முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி பேட்டிங் செய்து 16 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது.
இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மேலும் நியூசிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது. இந்த மைதானத்தில் 300 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவது கடினம். ஏற்கனவே நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி 103 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.