cricket: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் வராது பிசிசிஐ திட்டவட்டம்.
2025 ல் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் வராது என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகவும், பாதுகாப்பு காரணமாகவும் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அனுப்புவதை தவித்து கொண்டு வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடி 17 ஆண்டுகள் ஆகிறது.
Indian team is unlikely to play in Pakistan
தற்போது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியை அனுப்ப மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்திய ஆடும் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்தவும், மேலும் துபாயில் நடந்த அறிவுரிதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் தொடருக்கான அட்டவணையை நவம்பர் 11 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
எனவே இந்தியா உடனான போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அணிக்கு வேறு வழியில்லை. அதுதான் இரு அணிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.