இந்திய அணி தோல்வி – வங்கதேச அணி வெற்றி

0
298

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. வங்காளதேசம் சென்றுள்ள
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

மிர்புரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா ,ஷிகர் தவான் களமிறங்கினர்.

தொடக்கத்தில் தவான், 7 ரன்களிலும்,ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இறுதியில் 41.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்தது 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து,187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, 40 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 187 ரன்கள் எடுத்து ,ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Previous articleமுதல்வர் செல்லும் வழி..அந்த பக்கம் செல்ல 200 இந்த பக்கம் போக 500! வசூல் வேட்டையால் சிக்கிய டூப்ளிகேட் எஸ்ஐ!
Next articleவணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here