நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்!!

0
126

 

நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்…

 

நேற்று(ஆகஸ்ட்19) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் அணியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்கள் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

 

நேற்று(ஆகஸ்ட்19) யூ.ஏ.இ அணியும் நியூசிலாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற யூ.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய யு.ஏ.இ அணி 15.4 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இதையடுத்து நியூசிலாந்து அணியை உள்ளூரில் வீழ்த்தி முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணியை வீழ்திய யூ.ஏ.இ அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் பாராட்டுகள் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நியூசிலாந்தை தோற்கடித்தது ஒரு பெரிய சாதனையாகும், மேலும் இது பிரான்சைஸி கிரிக்கெட் என்ன செய்து வெற்றி பெற்றது என்பதையும் காட்டுகிறது.

 

முக்கிய டெஸ்ட் நாடுகள் அல்லாத நாடுகளிலிருந்து அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, அது விளையாட்டுக்கு நல்ல செய்தி.

 

@rashidkhan_19 ஐபிஎல்லில் நுழைந்தபோது, ​​ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பைகளில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயப்படக்கூடிய நாடாக இருக்கவில்லை, ஆனால் இப்போது அந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது.

 

எதிர்காலத்தில் மற்ற நாடுகள் ஐபிஎல்லில் பிரதிநிதித்துவம் பெறுவதைக் காணலாம்

அந்தந்த நாடுகளில் விளையாட்டின் அதிர்ஷ்டத்தை மாற்றுகிறது. நல்லது UAE” என்று பதிவிட்டுள்ளார்.

 

Previous articleஎன் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…
Next articleஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…