ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

0
76

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் மாநிலம் முழுவதிலும் 25 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஹிமாச்சல பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹிமாசல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 200 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் “முன்னதாக மத்திய அரசு 360.80 கோடி ரூபாயை இரண்டு தவணையாக ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய தேதிகளில் இரண்டு தவணைகளாக அளித்தது.

அதைப் போல ஹிமாசல பிரதேச மாநிலத்தின் கடந்தகால நிவாரண தொகையா 189.27 கோடி ரூபாயை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மத்திய அரசு அளித்தது. இந்த நிவாண நிதியை பயன்படுத்தி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஹிமாச்சல மாநில அரசு சரி செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள பாதிப்பு நிவாரண நிதியாக 200 கோடி ரூபாயை மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.