டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி!

0
189

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு! நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடி வருகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் 3-0 என்ற தொடர் வெற்றி கணக்கில் இந்திய அணி கோப்பையை வென்றது.

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய இருக்கிறது.

ஒரு நாள் போட்டிகளில் வெற்றியை தவறவிட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர் போட்டிகளில் வெற்றியை  பெறுவதற்கு கடுமையாக போராடும். ஏற்கனவே ஒரு நாள் கோப்பையை முழுவதும் கைப்பற்றிய இந்திய அணி t20 போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும்.

இந்தப் போட்டியில் ஒரு நாள் போட்டியில் விளையாடிய மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி முகமது சிராஜ் ஆகியோர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் பலவீரர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அணியை ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா வழி நடத்தும் நிலையில் ஷூப்மன்கில், இஷான் கிஷான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குகின்றனர். மேலும் ப்ரித்வ் ஷா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காயம் காரணமாக ருத்ராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து விலகி உள்ளார்.

ஒரு நாள் தொடரை முழுவதுமாக இழந்துவிட்ட நியூசிலாந்து அணி டி20 யை வெல்ல மிகுந்த தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Previous articleஇது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 
Next articleடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் கடத்தல்! பயணி அதிரடி கைது!